![“If brokers interfere in free housing scheme..” - M.L.A. Vasanthan Karthikeyan](http://image.nakkheeran.in/cdn/farfuture/W2ps4PPnyDLdv9pc08dduOHZ1nYYhGMf6ahOM0ZvA5o/1657887150/sites/default/files/inline-images/th_2819.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏவும், திமுக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான வசந்தன் கார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் மக்களுக்கான இலவச திட்டங்களை அமைச்சர் ஏ.வா வேலு கண்காணிப்பில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மேற்பார்வையில், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் சிறப்பாக மக்களிடம் கொண்டு சென்று செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், தற்போது அரசு ஏழை எளிய மக்களுக்கு இலவச வீடு வழங்கி வருகிறது. அந்தத் திட்டத்தில் சில இடைத்தரகர்கள் பயனாளிகளிடம் பணம் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. எனவே, பயனாளிகள் யாரும் அப்படிப்பட்ட புரோக்கர்களிடம் அரசு திட்டங்களை பெற லஞ்சமாக பணம் எதுவும் தரக்கூடாது. அதை மீறி லஞ்சமாக யாராவது பணம் கேட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பயனாளிகள் மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இடைத்தரகர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.