Skip to main content

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கவுன்சிலர்!

Published on 13/02/2025 | Edited on 13/02/2025

 

Councilor arrested for misbehaving with 14-year-old girl

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (45).  இவர் பாச்சல் கிராம பஞ்சாயத்தின் 10 வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தந்தை இல்லாத தாயின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 14 வயது சிறுமிக்கு பலமாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். அவர் நேரடியாக சம்மந்தப்பட்டவரிடம் சென்று கேட்டபோது, மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக  சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மகேந்திரனை  நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கிராம வார்டு உறுப்பினரான மக்கள் பிரதிநிதி 14 வயது சிறுமிக்கு பாலில் தொந்தரவு கொடுத்து கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 

சார்ந்த செய்திகள்