![Sivagangai Dt Manamadurai near student bullet driving incident 3 people arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/G9DTg05vC5WFHW5PR4iJ8P-ILe599M2TDaD8O6R-nzw/1739431856/sites/default/files/inline-images/our-arrest-art_40.jpg)
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்புனல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி செல்லம்மாள். இந்த தம்பதியினருக்கு ஐயாச்சாமி என்ற மகன் உள்ளார். இவர் சிவகங்கையில் உள்ள அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பள்ளி படித்து வருகிறார். ஐயாச்சாமியின் தந்தை இறந்துவிட சித்தப்பா பூமிநாதன் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு, மற்ற சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐய்யாசாமி வழக்கம் போல் கல்லூரியில் இருந்து புல்லட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் அங்கிருந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், “எங்கள் முன்னால் நீ புல்லட்டில் வரலாமா?’ எனக் கேட்டுள்ளனர். அதோடு அவரது கையை கத்தியால் வெட்டி உள்ளனர். இதனால் ரத்தம் சொட்டச் சொட்டச் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்திற்குக் காரணமான ஆதி ஈஸ்வரன், வினோத், வல்லரசு ஆகிய மூன்று பேரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புல்லட் ஓட்டியதற்காகப் பட்டியலின மாணவரின் கை வெட்டப்படப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.