Skip to main content

மாணவர்களின் ஆணுறுப்பில் டம்பள்ஸை தொங்கவிட்டு ராக்கிங் செய்த சீனியர்ஸ்!

Published on 12/02/2025 | Edited on 12/02/2025

 

senior students Ragging Juniors In Kerala Nursing College

முதலாமாண்டு படிக்கும் நர்சிங் கல்லூரி மாணவர்களை, சீனியர் மாணவர்கள் கொடூரமாக ராக்கிங் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலம், கோட்டயம் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் 5 பேர் கடந்த 3 மாதங்களாக தொடர்ச்சியாக ராக்கிங் செய்துள்ளனர். வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளில் டம்பள்ஸ்களைத் தொங்கவிட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். 

இதனை தங்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்தும், போலீசில் புகார் அளித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமைகளில் மது வாங்குவதற்காக ஜூனியர் மாணவர்களிடம் சீனியர் மாணவர்கள் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஜூனியர் மாணவர்கள், தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரைத் தொடர்ந்து, சீனியர் மாணவர்கள் 5 பேரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. மேலும், ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த 5 மாணவர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்