![A paranormal person who has been living as a woman for 36 years in uttar pradesh](http://image.nakkheeran.in/cdn/farfuture/HxwKf8UtA4E6R_E1udR1irYJJ1AU0IizJNbVGO2sTkE/1739432695/sites/default/files/inline-images/ambulancenorn.jpg)
பேய்க்கு பயந்து ஆண் ஒருவர் 36 வருடங்களாக பெண் உடை அணிந்து பெண்ணாக வாழ்ந்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த ஒரு நபர், தன்னை ஒரு ஆவி துன்புறுத்தி வருவதாக எண்ணி 36 வருடங்களாகப் பெண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறார். இவருக்கு மூன்று முறை திருமணம் நடந்துள்ளது. மறைந்து போன தனது இரண்டாவது மனைவியின் ஆவி தன்னை அச்சுறுத்தி வருவதாக நம்பியுள்ளார். இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எண்ணி உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் பெண்ணாக வாழ்ந்து வருகிறார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ‘இரண்டாவது மனைவியுடைய மரணத்திற்குப் பிறகு, எனக்கு இந்தக் கனவு வந்தது. அவளுடைய ஆன்மா என்னைத் தொந்தரவு செய்கிறது, இது என்னை ஒரு பெண்ணைப் போல வாழக் கட்டாயப்படுத்தியுள்ளது. எனது ஒன்பது மகன்களில் ஏழு பேரும் இறந்துவிட்டனர்’ என்று கூறினார்.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, சுற்றியுள்ள கிராமங்களில் இந்த செய்தி பரவியுள்ளது. சிலர், அந்த நபர் மனநோயால் பெண் வேடமிட்டு வருவதாகவும், சிலர் பேய்கள் காரணமாக இருக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகின்றனர். இந்த செய்தி அந்த கிராமங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.