Published on 13/02/2025 | Edited on 13/02/2025
சென்னையில் 23 புறநகர் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணி காரணமாகச் சென்னையில் 23 புறநகர் ரயில்களின் சேவை இன்று (13.02.2025) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டிரல் - கூடுர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மூர் மார்க்கெட்- சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி என இரு மார்க்கங்களிலும் இயங்கும் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி, மூர் மார்க்கெட் - ஆவடி உள்ளிட்ட புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போன்று நெல்லூர் - சூலூர்பேட்டை இடையே இயங்கும் மின்சார ரயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.