தமிழகம் முழுவதும் 9,351 காலிப்பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 6,962 மையங்கள் தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வில் வரலாற்றிலே மிக அதிகமாக 20,69,274 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஒரு இடத்திற்கு 221 பேர் போட்டி என்ற நிலை இருக்கும் நிலையில் குரூப்-4 இன்று நடைபெற்று வருகிறது. புதிய முயற்சியாக தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவெண், விருப்பப்பாடம் ஆகிய விபரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள விடைத்தாள்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம், தவறான பதிவெண் எழுதுபவர்களுக்கு மதிப்பெண் குறைக்கும் நடவடிக்கை தவிர்க்கப்படும். மேலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் கால அவகாசம் கணிசமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், மதியம் 1 மணிக்கு முடிய உள்ளது.