Skip to main content

இந்தியாவில் கரோனாவுக்கு 681 பேர் பலி!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 

 

 

india coronavirus recovered union health ministry


இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,471- லிருந்து 21,393 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 652- லிருந்து 681 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960- லிருந்து 4,258 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 5,652 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 789 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 269 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

india coronavirus recovered union health ministry


அதேபோல் டெல்லியில் 2,248, குஜராத்தில் 2,407, ராஜஸ்தானில் 1,890, தமிழகத்தில் 1,629, மத்திய பிரதேசத்தில் 1,592, உத்தர பிரதேசத்தில் 1,449, தெலங்கானாவில் 945, கேரளாவில் 438, ஆந்திராவில் 813, கர்நாடகாவில் 427, புதுச்சேரியில் 7 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்