Skip to main content

கேரளாவை திணறடிக்கு கரோனா... ஒரே நாளில் 1100ஐ கடந்த தொற்று!

Published on 02/08/2020 | Edited on 02/08/2020
h

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது. 

 

நேற்று மட்டும் கேரளாவில் 1129 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 89 பேர் வெளிநாட்டில் இருந்தும், 114 பேர் வெளி மாநிலத்தில் இருந்து கேரளா வந்தவர்கள். பலருக்கு தொடர்புகள் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று மேலும்  8 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து, அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 83 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று மட்டும் 641 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 13,799 ஆக உயர்ந்துள்ளது.  மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,741 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 10,862 ஆக உள்ளது.
 

சார்ந்த செய்திகள்