தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போது வரை, திமுக கூட்டணி 131 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 102 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.
அதிமுக கூட்டணி முன்னிலை நிலவரங்கள்: (11:10AM)
அதிமுக - 86 சட்டமன்றத் தொகுதிகள்.
பாஜக - 5 சட்டமன்றத் தொகுதிகள்.
பாமக - 10 சட்டமன்றத் தொகுதிகள்.
தமாக - 0
பிற கட்சிகள் - 1 சட்டமன்றத் தொகுதி.
திமுக கூட்டணி முன்னிலை நிலவரங்கள்:
திமுக - 109 சட்டமன்றத் தொகுதிகள்.
காங்கிரஸ் - 10 சட்டமன்றத் தொகுதிகள்.
விசிக - 2 சட்டமன்றத் தொகுதிகள்.
சிபிஎம் - 2 சட்டமன்றத் தொகுதிகள்.
சிபிஐ - 2 சட்டமன்றத் தொகுதிகள்.
மதிமுக - 4 சட்டமன்றத் தொகுதிகள்.
பிற கட்சிகள் - 2 சட்டமன்றத் தொகுதிகள்.
கோவை தெற்கில் 534 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் மீண்டும் முன்னிலையில் உள்ளார்.
மநீம கமல்ஹாசன் - 7,074 வாக்குகள்
காங்கிரஸ் மயூரா எஸ்.ஜெயக்குமார் - 6,540 வாக்குகள்
பாஜக வானதி ஸ்ரீனிவாசன் - 4,597 வாக்குகள்
அதேபோல், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 9 சட்டமன்றத் தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 2 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிற கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.