Skip to main content

திமுகவினரின் உற்சாகம் குறைய காரணமான செய்தி!

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

நடந்து முடிந்த தேர்தலில் மாநிலத்தில் திமுக கூட்டணி தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர,போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றது. தமிழகத் தேர்தல் முடிவுகள் மற்ற கட்சிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கு என்று விசாரித்த போது, 23-ந் தேதி காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதுமே தமிழக மக்கள் மத்தியில் ரிசல்ட் பற்றிய பரபரப்பு ஆரம்பிச்சிடுச்சி. 

 

dmk



தமிழக நாடாளுமன்றத் தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி முன்னிலையில் இருப்பதாகச் செய்திகள் வெளிவர ஆரம்பிச்சதும், தி.மு.க. தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் அங்கங்கே வாக்கு எண்ணும் மையங்கள் முன்னாடி ஆட்டம், பாட்டம், பட்டாசுன்னு ஆரவாரிச்சாங்க. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் சென்னை சித்ரஞ்சன் சாலை இல்லத்தின் முன் பெருந்திரளாகத் திரண்ட தி.மு.க.வினர், ஸ்டாலினைப் பார்க்கணும்னு சொன்னாங்க. மாலையில் அறிவாலயத்தில் சந்திப்பதாகச் சொன்னார் ஸ்டாலின். 


கட்சியின் சீனியர் வேட்பாளர்கள் பலரும் அவ்வப்போது அவரைத் தொடர்புகொண்டு, நிலவரத்தை மகிழ்வோடு பகிர்ந்துக்கிட்டாங்க. அதே நேரம் தேசிய அளவில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த வெற்றி பற்றிய செய்திகள், தி.மு.க.வினரின் உற்சாகத்தைக் கொஞ்சம் குறைத்துவிட்டது. மாலையில் அறிவாலயத்துக்கு ஸ்டாலின் வந்தப்ப, தி.மு.க.வில் கலைஞர் காலத்து உற்சாகம் கரை புரண்டது என்று திமுக தொண்டர்கள் தெரிவித்தனர்.
 

சார்ந்த செய்திகள்