
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவி காலம் முடிந்ததை ஒட்டி, புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த தேர்தலில், நயினார் நாகேந்திரன் வேட்புமனுத் தாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று (12-04-25) தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை வானகரம் பகுதியில் பா.ஜ.க சார்பில் மாநிலத் தலைவர் அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டு வெற்றிச் சான்றிதழை தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி வழங்கினார்.
அதன் பின்னர், கோப்புகளில் கையெழுத்திட்டு பா.ஜ.க மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரனுக்கு அனைவரும் எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையில், பா.ஜ.க பொதுக்குழு உறுப்பினர்களக எல்.முருகன், தமிழிசை செளந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.