Published on 25/12/2018 | Edited on 25/12/2018
மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,
மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் விவாதிக்க தயார். இதுபோன்ற வெற்று சவால்களை விட்டு பேசுவது தமிழகத்திற்கு இடையூறாக இருக்கும். அவரும் தமிழகத்திறான நலன் கருதி பார்க்க வேண்டும். அதைவிட்டு சவால் விடுகிறேன் என்று பேசுகிறார். எப்போது பார்த்தாலும் திராவிட கட்சிகள், திராவிட கட்சிகள் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். திராவிட கட்சிகள்தான் இந்த தமிழகத்தை ஆளும் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. பாஜகவோ, காங்கிரஸ் கட்சியோ கனவில் கூட தமிழகத்தை ஆளுவதற்கு வர முடியாது என்றார்.