இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் நேற்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு அரசின் அனைத்து நிபந்தனைகளையும் இந்து மக்கள் கட்சி ஏற்கிறது.
ஒரு சில இடங்களில் காவல்துறையின் அதிகப்படியான கெடுபிடிகளை மீறி விழா நடத்திய இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மிக அரசியலை முன்னெடுக்கும் ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வரவேண்டும். அவர் வந்தால் தமிழகத்தில் பெரும் மாற்றம் ஏற்படும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கத்தேர் ஓட அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தீபத்திருவிழா அன்று மலையேற பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.