!['Tamil Flag Flying' - Vijay released the flag and the song](http://image.nakkheeran.in/cdn/farfuture/JJhNBRFFdOBPUTiX4LhTCY92Qx7GrHXliP7MmxOIV1c/1724299940/sites/default/files/2024-08/a461.jpg)
!['Tamil Flag Flying' - Vijay released the flag and the song](http://image.nakkheeran.in/cdn/farfuture/hQiWW2fKfhT461h45iiGHl8Oc1tBjsCPTNPbUy-sdqY/1724299940/sites/default/files/2024-08/a467.jpg)
!['Tamil Flag Flying' - Vijay released the flag and the song](http://image.nakkheeran.in/cdn/farfuture/qZKGzSdDlO8Xn8zZsMhmVlNtCz-eVgrYuT5Gr0wwKS4/1724299940/sites/default/files/2024-08/a468.jpg)
!['Tamil Flag Flying' - Vijay released the flag and the song](http://image.nakkheeran.in/cdn/farfuture/ryXEOI55wX7SNNms6Ux2OspwIjAVVDvEIVPU-iMPSHo/1724299940/sites/default/files/2024-08/a469.jpg)
திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார் விஜய். மேலும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு எனக் குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் அவ்வப்போது நடைபெற்று வந்தது.
அடுத்தகட்டமாக தவெக கட்சிக்கான கொடி இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதற்கான விழா இன்று காலை தொடங்கியது. இதில் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் இரண்டு போர் யானைகளுக்கு நடுவில் வாகை மலர் இடம் பெற்றிருக்கும் வகையிலான கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கொடி கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து 'தமிழன் கொடி பறக்குது' எனத் தொடங்கும் கட்சி பாடலும் வெளியிடப்பட்டது.