சென்னை வந்த அமித்ஷா, ஆடிட்டர் குருமுர்த்தியிடம் கடும் கோபத்தைக் காட்டினார் என்று பாஜக தரப்பில் பேசப்பட்டு வருகிறது.
சென்னையில் தன்னைச் சந்திக்க வந்த குருமூர்த்தியை அமித்ஷா, ரெண்டரை மணி நேரம் காக்க வச்சிருந்தாராம். காரணம், ரஜினி தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் காட்டி வந்ததோடு, தனது குடும்ப விவகாரம் முதல் பொருளாதார பரிமாற்றம் வரை தன்னைக் கலக்காமல் அவர் எதையும் செய்யமாட்டாருன்னும் குருமூர்த்தி சொல்லி வந்திருக்கிறார்.
மேலும் இங்கிருக்கும் சாதாரண நிறுவனங்கள் முதல், முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை, இவர் நினைத்தால் எதையும் செய்வார்ன்னு நம்பும்படி நடந்துவந்தாராம். பிரதமர் மோடியின் பெயரைப் பயன்படுத்தி அவர் பெரிய அளவுக்கு ஆதாயம் அடைந்ததாகவும் டெல்லிக்குத் தகவல்கள் சென்றுள்ளது.
இதையெல்லாம் முழுமையாகத் தெரிஞ்சிக்கிட்டதால்தான் அமித்ஷா, இந்தமுறை அவரைக் காக்க வச்சி, அதன்பிறகு காய்ச்சி எடுத்து விட்டாராம். இதனால் கடும் அப்செட்டில் இருந்த குருமூர்த்தி, ஆன்மீக அரசியலைக் குறிவைத்து, ரஜினி தன் யாத்திரையை ஜனவரியில் தொடங்கப்போறார்னு 29-ந் தேதி அமித்ஷாவுக்குத் தகவல் அனுப்ப, இது உண்மையான்னு டெல்லி விசாரிக்கச் சொல்லியிருக்கிறது. இந்த நிலையில் ''ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு'' என டிசம்பர் 3ஆம் தேதி தனது டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் ரஜினி. இதனை உடனடியாக டெல்லிக்கு தெரிவித்திருக்கிறார் குருமூர்த்தி.