
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 27வது போட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு (12-04-25) நடைபெற்றது. இதில், பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடித்து 82 ரன்கள் குவித்து அவுட்டானார். இதையடுத்து, பிரப்சிம்ரன் சிங் 23 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் அடித்து 42 ரன்கள் எடுத்தார். பிரியான்ஷ் ஆர்யா 13 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடித்து 36 ரன்கள் எடுத்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் 11 பந்துகளில் 1 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடித்து 34 ரன்கள் எடுத்தார். இறுதியாக, 245 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 246 ரன்கள் இலக்கு வைத்தது. பஞ்சாப் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணியில் இருந்து பந்து வீசிய ஹர்ஷல் படேல் 4 விக்கெட் எடுத்தார்.
அடுத்ததாக 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. அதில், அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 55 பந்துகளில் 14 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் விளாசி 141 ரன்கள் எடுத்து குவித்தார். டிராவிஸ் ஹெட் 37 பந்துகளுல் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்து 66 ரன்கள் எடுத்தார். ஹென்ரிச் கிளாசென் 14 பந்துகளில் 2 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடித்து 21 ரன்கள் எடுத்தார். இறுதியாக, ஹைதராபாத் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு மட்டுமே 247 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வீழ்த்தியது.