
அண்மையில் திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் சென்னையில் நடைபெற்ற திமுக கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். முதல் முறையாக மேடையில் பேசிய அவர், ''ஒரு ஊட்டச்சத்து நிபுணராக சில மேடைகளில் பேசியிருக்கிறேன். ஆனால் இதுதான் என் முதல் அரசியல் மேடை. என் மனதில் இருந்து பேச வேண்டும் என்று நினைக்கிறேன். எதையுமே நான் எழுதி வரவில்லை. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது வகுப்பு ஆசிரியர் எல்லாரிடமும் நீங்க யார் ரசிகை என கேட்டார்கள். சில பேர் நான் மைக்கேல் ஜாக்சன் ரசிகை என்று சொன்னார்கள். சிலர் அமீர்கான் ரசிகை என்றார்கள். நான் கலைஞர் ஐயாவின் ரசிகை என்று பெருமையாகச் சொன்னேன். இன்று ஒரு பெண்ணா இங்கு நின்று பேசுகிறேன் என்றால் அந்த தைரியம் வந்ததற்கு காரணம் கலைஞர் தான்.
அப்பா காசில் வாழக்கூடாது சுயமாக சம்பாதிக்கணும் என்ற தைரியம் வந்ததற்கு காரணமும் கலைஞர் தான். சங்கிலியை உடைத்து விட்டு கனவுகள் பின்னாடி ஓடணும் என்கிற தைரியம் வந்ததற்கு காரணம் கலைஞர் தான். அதனால் எனக்கு திமுக மேலே இருக்கின்ற மரியாதை பற்றியும்; கலைஞர் மேல் இருக்கும் மரியாதை பற்றியும்; திமுக தலைவர் ஸ்டாலின் மேலே இருக்கும் மரியாதை பற்றியும்; யாராலும் வீழ்த்த முடியாத மாவீரன் சேகர்பாபு ஐயாவின் மேலே எனக்கு இருக்கும் மதிப்பும் மரியாதை பற்றி என் மனசிலிருந்து பேச வேண்டும் என்று நினைத்தேன். திமுகவின் வரலாறை எல்லோரும் படிக்க வேண்டும். திமுக வரலாறு படித்தால்தான் நமக்கு வெற்றி என்றால் என்ன; தோல்வி என்றால் என்ன; தியாகம் என்றால் என்ன; மனித நேயம் என்றால் என்ன; வாழ்க்கை என்றால் என்ன என்று புரியும்.
எனக்கு என்னைப் பற்றி ஒரு புரிதல் வந்ததற்கு திமுகவின் வரலாறு தான் காரணம். என்னுடைய ஸ்கூல் டேய்ஸ் காலேஜ் டேய்ஸ்ல பிரண்ட்ஸோட ரூம்ல மைக்கேல் ஜாக்சன் போஸ்டர் இருக்கும். ஷாருக்கான் போஸ்டர் இருக்கும். என்னுடைய ரூமுக்கு வந்தால் தந்தை பெரியாரின் போஸ்டர் இருக்கும். எங்க அப்பா போஸ்டர் இருக்கும். கலைஞர் ஐயா போஸ்டர் இருக்கும். ஸ்டாலின் உடைய போஸ்டர் இருக்கும். துணை முதல்வர் உதயநிதி சார் ஏசி காரில் உட்கார்ந்து கொண்டு சொகுசு விமானத்தில் பிரண்டு கல்யாணத்துக்கு போகின்ற ஒரு போலி அரசியல்வாதி கிடையாது. மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் நமக்காக இறங்கி வேலை செய்வார். பாஜக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை காக்க வந்த மாமன்னன். அவரை எதிர்த்து யார் எங்க நின்னாலும் டெபாசிட் போயிடுங்க'' என்றார்.