Published on 16/01/2019 | Edited on 16/01/2019
உத்திரபிரதேசத்தில் குரங்குகளிடமிருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார். உத்திரபிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் இரு பெண்கள் வீட்டு பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு திடீரென வந்த குரங்குகள் அவர்களை தாக்க ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாக பயந்து போன அவர்கள், அங்கிருந்து தப்பிக்கும் பொருட்டு பால்கனியிலிருந்து குதித்துள்ளனர். இதில் 60 வயதான சாவித்திரி தேவி என்ற பெண் பலியாகியுள்ளார். அவருடன் இருந்த மற்றொரு பெண்ணான அவரது மருமகள் ரேணு என்பவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.