Skip to main content

“ஜாலியா வாங்க ஜாலியா போங்க” - தனுஷ் அழைப்பு

Published on 10/02/2025 | Edited on 10/02/2025
dhanush neek trailer released

ப.பாண்டி, ராயன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தை தனுஷ் இயக்குவதோடு மட்டும் இல்லாமல் தயாரித்தும் வருகிறார். இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
 
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் முதல் பாடலாக வெளியான ‘கோல்டன் ஸ்பாரோ...’ நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இரண்டாவது பாடலாக வெளியான ‘காதல் ஃபெயில்’, மூன்றாவது பாடலாக வெளியான ‘ஏடி’ மற்றும் நான்காவது வெளியான ‘புள்ள’ பாடல்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

ட்ரெய்லரின் தொடக்கத்தில் தனுஷ், “ரொம்ப வழக்கமான கதைதாங்க” என ஆடியன்ஸுக்கு சொல்கிறார். பின்பு நாயகன் பாவிஷ் இன்னொரு நாயகி பிரியா பிரகாஷ் வாரியர் இருவரும் காதலிக்கின்றனர். பின்பு பாவிஷுடைய முன்னாள் காதலியான அனிகாவுக்கு வேறொரு நபருடன் கல்யாணம் நடக்கிறது. இது பிரியாவுக்கு தெரிய வர, பின்பு பாவிஷும் அனிகாவும் எப்படி காதலித்தனர் என காட்டப்படுகிறது. இறுதியில் அனிகா திருமணம் நடந்ததா, பாவிஷ் பிரியா காதல் என்ன ஆனது என்பதை விரிவாக இப்படம் சொல்வது போல் தெரிகிறது. ட்ரெய்லரின் இறுதியில் “ஜாலியா வாங்க ஜாலியா போங்க” என தனுஷ் ஆடியன்ஸிடம் சொல்ல ட்ரெய்லர் முடிகிறது. இந்தப் படம் காதல், காமெடி, எமோஷன் ஆகியவை கலந்து உருவாகியிருப்பதாக தெரிகிறது. இப்படம் வருகிற 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.  

சார்ந்த செய்திகள்