!['Unless I am thinking of her'-Thadi Balaji is buzzing](http://image.nakkheeran.in/cdn/farfuture/Nqze5Yz8PZxipA15l2c4u0mDo6WTfbTL_Zffig-W-PM/1738778194/sites/default/files/inline-images/a2458.jpg)
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. அண்மையில் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்ட பலருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகர் தாடி பாலாஜி இணைந்திருந்தார். கட்சியில் இணைந்த பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்து அவரிடம் வாழ்த்தையும் பெற்றிருந்தார். தொடர்ந்து கட்சிப் பணியில் தீவிரம் காட்டி வந்தவர், திடீரென ஒருநாள் விஜய்யின் படத்தை தன்னுடைய மார்பில் பச்சை குத்தி அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். ''விஜய்யின் உருவத்தை பச்சை குத்துவதற்கு ஏழு மணி நேரமானது. அந்த வலியை விஜய்க்காக தாங்கிக் கொண்டேன்'' என பெருமிதமாக கூறினார்.
இந்நிலையில் தவெகவில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தொடர்பான அறிவிப்பு ஒன்றன்பின் ஒன்றாக வெளியான நிலையில் நடிகர் தாடி பாலாஜிக்கு எந்தவித பதவியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தாடி பாலாஜி வைத்துள்ள வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைரலாகி வருகிறது. அதில் 'அவளோ புது பாய் பிரண்டுடன் சந்தோஷமாக இருக்கிறாள். தற்குறி நான் அவளின் நினைவுகளோடு' என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இது தவெக கட்சியினரிடையே இடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.