கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் சுப்பிரமணியனின் மகன் சித்ரையன் என்பவர் வசித்து வருகிறர். இவர் ஓசூர் தாலுகா அலுவலகத்திற்கு முன்புள்ள டீ கடை ஒன்றில் டீ மாஸ்டராக கடந்த 8 வருடமாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதே பகுதியில் உள்ள ஒரு துணிக்கடை ஓசூரை சேர்ந்த தர்னீஷ் என்பவரின் மனைவி செல்வி வேலை செய்தபோது, டீக்கடைக்கு செல்வி டீ வாங்க செல்லும்போது ஏற்பட்ட பழக்கத்தினால் சித்ரையனும் செல்வியும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஜூலை மாதம் சித்தரையன் தனது வீட்டிற்கு செல்வியை அழைத்து வந்துள்ளார். செல்வியின் கணவர் தர்னீஷ் ஓசூர் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்த நிலையில் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வீரசோழபுரம் கிராமத்திற்கு போலீசார் தர்னீஷ் மனைவியை தேடி சித்ரையன் வீட்டிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி செல்வியை அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவினால் மீண்டும் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் செல்வி சித்ரையன் உடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஜனவரி மாதம் பொங்கலுக்கு தனது பிள்ளைகளை பார்க்க செல்வி ஓசூருக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. பொங்கல் முடிந்து கடந்த 28ஆம் தேதி அன்று மீண்டும் தனது ஆண் நண்பர் சித்ரையனுடம் சேர்ந்து வாழ வந்ததாக கூறப்படுகிறது. சித்திரையன் வி.பாளையம் கிராமத்தில் செல்வியுடன் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த செல்வியின் கணவர் தர்னீஷ் தனது மனைவியை அனுப்பிவை என்று சித்திரையனுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இருவரும் தகாத வார்த்தைகளால் கூறி அனுப்பி வைக்க முடியாது என சித்ரையன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சித்திரையன் கள்ளக்குறிச்சி டோல்கேட் அருகே ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார். கடந்த ஜனவரி 31ஆம் தேதி டீக்கடையில் வேலை செய்துவிட்டு சித்ரையன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிய போது டோல்கேட் அருகே செல்வியின் கணவர் மற்றும் அவரது உறவினர் நான்கு பேரும் சேர்ந்து சித்ரையனை வழிமறித்து கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் ஓட ஓட விரட்டி கை, கால்களை வெட்டி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் துடித்த சித்ரையனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரித்தார். இதுக்குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது இந்த சம்வத்திற்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடிக்க கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் எட்டு தனிப்படைகளை அமைத்தனர். தனிப்படை போலீசார் கீழ்குப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது தாக்குதலுக்கு பயன்படுத்திய மாருதி கார் அவ்வழியாக வந்தது. போலீசாரை பார்த்தவுடன் தப்பிக்க முயன்ற செல்வியின் கணவர் மற்றும் அவரது உறவினர்களை மடக்கிப் பிடித்துக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அதில் தனது மனைவியை காதலித்து சித்ரையன் அழைத்துவந்து விட்டதாகவும் சித்திரையனுடன் தொலைப்பேசியில் எனது மனைவியை அனுப்பிவை எனக் கேட்டபோது அனுப்ப முடியாது என கடுமையாக தெரிவித்ததாகவும் எனது பிள்ளைகள் அம்மாவை பார்க்க வேண்டும் என தெரிவித்ததால் மனமுடைந்த தர்னீஷ் தனது உறவினரான ரஞ்சித் குமார், வெங்கடசாமி, மதன்குமார் ஆகியோருடன் சேர்ந்து சித்ரையன் என்பவரை கொலை செய்து விட்டு தனது மனைவியை அழைத்துச் செல்வதற்காக கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக பரபரப்பான வாக்குமூலத்தை கொடுத்துள்ளனர்.
செல்வியின் கணவர் தர்னீஷ், திடீரென காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடியதாகவும் சிறிது தூரம் சென்றபோது தடுமாறி கீழே விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் மாவு கட்டுடன் சிகிச்சை பெற்ற நிலையில் செல்வியின் கணவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.