ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்திலுள்ள மேவட் என்னுமிடத்தில் வசிக்கும் அஸ்லு என்பவர் தனது ஆடு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறது என காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் கடந்த 25ம் தேதி இரவு தனது ஆட்டை 8 பேர் திருடிச்சென்றதாகவும், அவர்கள் குடிபோதையில் ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளதாகவும் கூறியுள்ளார். இதைக்கேட்ட காவல்துறையினர் உட்பட அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
விசாரணையில் அந்த 8 பேரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. ஆடு இறந்ததற்கான காரணம் உடற்கூறு ஆய்வில் நடக்கும் பரிசோதனைக்கு பின் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக ஆட்டின் உரிமையாளர், எட்டு பேரும் எனது ஆட்டை இழுத்துக்கொண்டு பழைய கட்டிடத்திற்கு சென்றனர். நான் அவர்களை தடுத்து, போலிசில் புகார் கொடுக்கப்போகிறேன் என கூறினேன். அதற்கு அவர்கள் நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள், நாங்கள் அப்படிதான் செய்வோம் என கூறிவிட்டனர். மேலும், எங்களுக்கு பெரிய மனிதர்களுடன் பழக்கமிருக்கிறது என்றும், சிறைசெல்ல பயமில்லை என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு ஆட்டை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது என்ற செய்தி பலர் மத்தியில் அதிர்ச்சியையும், சமூகம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.