புதுச்சேரியில் விபத்துக்களை தடுக்கும் விதமாக ஹெல்மெட் கட்டாயம் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவும், காவலர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஒட்டவும் டிஜிபி சுந்தரி நந்தாவுக்கு ஆளுநர் கிரண்பேடி நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது,
புதுச்சேரியில் ஹெல்மெட் சட்டத்தினை நடைமுறை படுத்துவது தொடர்பாக சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இது தொடர்பாக ஏற்கனவே முடிவு எடுத்து ஆயத்த வேலைகளை பார்த்ததில் நடைமுறைபடுத்தவும், அபராதம் போடுவதும் புதுச்சேரியில் சரி வராது என்பதுதான் நடைமுறை.
மேலும் ஹெல்மெட் அணிவது தொடர்பாக மாநில அரசு சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் கிரண்பேடி தனிப்பட்ட முறையில் ஹெல்மெட் அணிய டிஜிபிக்கு உத்தரவு போடமுடியாது. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே உத்தரவு போடும் அதிகாரம் உள்ளது. ஆளுநர் ஹெல்மெட் அணிய காவல்துறை தலைவர் சுந்தரி நந்தாவிற்கு உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக அவர்கள் கோப்பு அனுப்பிய பிறகு பார்க்கலாம் என்று அவர் கூறினார்.
Published on 14/08/2018 | Edited on 14/08/2018