Skip to main content

மனைவி மகளைக் கொன்ற நபர்; சிறையில் இருந்து வெளியே வந்து நடத்திய கொடூரம்!

Published on 13/02/2025 | Edited on 13/02/2025

 

The man who released from prison and hit his wife and daughter in assam

அசாம் மாநிலம், கவுகாத்தி பகுதியைச் சேர்ந்தவர் ஜூலி டெகா. இவருக்கு 15 வயதில் மகள் இருந்தார். ஜூலியின் கணவர் இறந்ததால், கருணை அடிப்படையில் அவருக்கு ரயில்வே வேலை கிடைத்தது. அதன்படி ஜூலி, வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயில் டீசல் என்ஜின் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். அதன் பிறகு, அவர் லோஹித் தாகுரியா (42) என்ற நபரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம், தனது மகளை இரண்டாவது கணவர் லோஹித் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி ஜூலி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், லோஹித்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு லோஹித் சிறையில் இருந்து வெளியே வந்தார். கடந்த 11ஆம் தேதி இரவு லோஹித், ஜூலியை வீட்டில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அதிகாலை நேரத்தில் லோஹித் தனது உறவினர் ஒருவருக்கு, மனைவி மற்றும் மகளை கொன்றுவிட்டதாகவும், தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக செய்தி அனுப்பியுள்ளார். 

அடுத்த நாள் மதியம் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால்,சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போது, அங்கு சிறுமியின் தொண்டை அரிவாளால் வெட்டப்பட்ட நிலையிலும், ஜூலி மரத்துண்டால் தாக்கப்பட்ட நிலையிலும், லோஹித் தற்கொலை செய்து கொண்ட நிலையிலும் உடல்கள் கிடந்துள்ளது. இதனையடுத்து, அந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மகளை கொடூரமாகக் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்