![S.A. Chandrasekhar, Shobha, who performed a special yagna!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Q8wHX3lxXcUoZAcWge1tqqIhTip-Pwmhx0MbWOFdHvg/1739463572/sites/default/files/inline-images/a2545.jpg)
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தேர்தல் வியூக வகுப்பாளர்களை விஜய் சந்தித்து வருகிறார். அண்மையில் பிரசாந்த் கிஷோரை விஜய் சந்தித்திருந்தது பேசுபொருளாகி இருந்தது.
இந்நிலையில் சென்னை கொரட்டூரில் சாய்பாபா கோவிலில் விஜய்யின் பெற்றோர் சிறப்பு யாகம் நடத்தினர். சென்னை கொரட்டூரில் சாய்பாபா கோவில் கட்டப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி இன்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. முன்னதாக நடிகர் விஜய்யின் தாய் ஷோபா விருப்பத்திற்கு இணங்க கொரட்டூரில் சாய்பாபா கோவிலை விஜய் நிறுவியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
சாய்பாபா கோவில் துவக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில் கோவில் நிறுவப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் தலைமையில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றது.