Skip to main content

லக்கிம்பூரில் ராகுல், பிரியங்கா... வழக்கை கையில் எடுக்கும் உச்சநீதிமன்றம்!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

h

 

உத்தரப்பிரதேசம், லக்கிம்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள், பாஜகவினர், பத்திரிகையாளர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து  ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை நேற்று முன்தினம் உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்து தடுப்பு காவலில் வைத்தனர்.

 

மேலும், லக்கிம்பூருக்குச் செல்ல அனுமதி கோரிய ராகுல் காந்தி தலைமையிலான ஐவர் குழுவிற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் தர்ணாவில் ஈடுபட,  நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவருடைய சொந்த காரில் லக்கிம்பூர் செல்ல காவல்துறை அனுமதி அளித்தது. அங்கு சென்ற அவர் ஏற்கனவே அங்கிருந்த தனது சகோதரியுடன் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்ற ராகுல், அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதற்கிடையே நாளை இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்