
சிதம்பரத்தில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தி 44 பேரை கைது செய்துள்ளனர்.
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மத்திய அரசின் புதிய வக்ஃபு சட்டத்தை திரும்ப பெறு வலியுறுத்தியும், சிறுபான்மையினர் மீதான ஒடுக்கு முறையை நிறுத்து வலியுறுத்தியும் சிதம்பரத்தில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று மாலை சிதம்பரம் காந்தி நிலையில் அக்கட்சியினர் திரண்டனர். பின்னர் அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாவட்டச் செயலாளர்கள் ஜாகிர் உசேன் தலைமையில் ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். ரயில் நிலைய முகப்பு பகுதியில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கண்டன முழுக்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்ட 44 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இரவு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.