Published on 03/08/2018 | Edited on 03/08/2018
உத்திரப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அங்குள்ள அரசு கட்டிடங்களுக்கு காவி நிறம் பூசப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சைக்கு பிறகு தற்போது சஹஜான்பூர் மாவட்டத்திலுள்ள பந்தா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு காவி நநிறம் பூசப்பட்டது மேலும் புது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
போன வருடம் வரை அந்த காந்தி சிலையில் உடை வெள்ளை நிறத்திலும் கண்ணாடி கருப்பு நிறத்திலும் இருக்க தற்போது இரவோடு இரவாக காந்தி சிலையின் உடலில் உடுத்தியிருக்கும் உடைக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தரப்பு இது கண்டிப்பாக பாஜகவின் வேலையாகத்தான் இருக்கும் என அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.