Skip to main content

“தயவுசெய்து கைது செய்யுங்கள்...” - போலீசில் சரணடைந்த நபர்!

Published on 11/04/2025 | Edited on 11/04/2025

 

Man who thrash his relative surrenders to police in jharkhand

நிலத் தகராறில், உறவினரை சகோதரர்கள் இருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட மாநிலம், குந்தி மாவட்டம் கடம்டா கிராமத்தைச் சேர்ந்தவர் புத்து முண்டா. இவரது சகோதரர் அச்சு முண்டா. இவர்களுக்கும் இவர்களது உறவினரான கங்கு முண்டா (35) வுக்கும் இடையே நிலம் சம்பந்தமாக ஏற்கெனவே தகராறு இருந்துள்ளது. 

இந்த நிலையில், புத்து முண்டா கிராமத்தில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று ‘நான் கங்கு முண்டாவை கொலை செய்துவிட்டேன், என்னை தயவுசெய்து கைது செய்யுங்கள்’ என்று போலீசிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். 

அதில், இன்று காலை கிராமத்தில் உள்ள குளத்திற்கு குளிப்பதற்காக கங்கு முண்டா சென்றுள்ளார். இதனை கவனித்த சகோதரர்கள் இருவரும், அந்த இடத்திற்கு விரைந்து சென்று அவரைத் தாக்கியுள்ளனர். மேலும், ஒரு கூர்மையான ஆயுதத்தை கொண்டு கங்கு முண்டாவின் கழுத்து, நெற்றி என அவர் சாகும் வரை பல முறை குத்தி சகோதரர்கள் இருவரும் அவரை கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, புத்து முண்டா சொன்ன தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று கங்கு முண்டாவை உடலை கைப்பற்றினர். 

சரணடைந்த புத்து முண்டாவை கைது செய்த போலீசார், தப்பிச் சென்ற அவரது சகோதரர் அச்சு முண்டாவை தீவிரமாக தேடி வருகின்றனர். கங்கு முண்டாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்