Skip to main content

'மோடி இஸ்ரோவில் காலடி வைத்த நேரம்தான் சந்திராயன் திட்டம் தோல்வி' குமாரசாமி குற்றச்சாட்டு!

Published on 13/09/2019 | Edited on 13/09/2019


சந்திராயன்-2 நிலவில் இறங்குவதைக் காண செப்டம்பர் 6-ம் தேதி இரவு பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு நேரில் சென்றார். இந்தநிலையில் சந்திரயான் 2 பின்னடைவுக்கு பிரதமர் மோடியின் வருகைதான் காரணம் என, நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ''கடந்த 2008-2009-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்துவந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சந்திராயன் 2 திட்டத்துக்கு அனுமதி கொடுத்து, அதே ஆண்டில் நிதியும் ஒதுக்கியது. தொடர்ந்து 12 வருடங்கள் போராடி விஞ்ஞானிகள் இந்த திட்டத்தை செயல்படுத்தினர். ஆனால் இதற்கு பின்னால் நான் தான் இருக்கிறேன் என்பதைக் காட்டுவதற்காக மோடி இஸ்ரோ மையத்துக்கு நேரில் சென்றார். அவர் இஸ்ரோவில் காலடி எடுத்து வைத்த நேரம் விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டவசமாக அமைந்து விட்டது என நினைக்கிறேன்,'' என்று தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்