சூடான் நாட்டின் கார்டம் நகரில் டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் 50 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று எரிவாயு நிரப்பப்பட்டு தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் தொழிற்சாலையில் தீ பிடித்தது. இதில் இந்திய தொழிலாளர்கள் உட்பட 23 பேர் தீயில் சிக்கி பலியாகி உள்ளனர். மேலும் இந்த விபத்தில் 130க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்தநிலையில் உயிரிழந்த 23 பேரில் தமிழகம் உட்பட இந்தியாவை சேர்ந்த 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. பலியானவர்களில் 18 பேர் இந்தியர்கள் என உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற அதிகாரபூர்வமற்ற தகவலும் வந்துள்ளது.
தீ விபத்து தொடர்பான தகவல்கள் அறிந்துகொள்ள சூடானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். +249-921917471 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.