Skip to main content

"ரஷ்யா கூறுவது பொய்" - குற்றம்சாட்டும் அமெரிக்கா... நீடிக்கும் போர் பதற்றம்!

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

russia

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வரும் நிலையில், அண்மையில் ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்தது. இதனால் ரஷ்யா எந்த நேரமும் உக்ரைன் மீது படையெடுக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா மறுத்தது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கும், கிழக்கு ஐரோப்பாவிற்கும் அதிநவீன பாதுகாப்பு ஆயுதங்களையும், போர்க் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பின.

 

இதனைத் தொடர்ந்து ரஷ்யா-உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் போர் பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில், ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுப்பைத் தொடங்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

 

இந்த நிலையில் நேற்று ரஷ்யா, உக்ரைன் எல்லையிலிருந்து படைகளைக் குறைப்பதாகவும், உக்ரைனிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான கிரிமியாவில் இருந்து தங்கள் படைகள், நிரந்தர தளத்திற்குத் திரும்புவதாகவும் தெரிவித்தது. இதனால் போர் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்தச்சூழலில் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர், உக்ரைன் எல்லையிலிருந்து படைகளைக் குறைத்துவிட்டதாக ரஷ்யா கூறுவது பொய் எனவும், ரஷ்யா மேலும் 7 ஆயிரம் பேரை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளதாகவும் கூறியுள்ளது தணிந்திருந்த பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்