பெரு நாட்டின் பிரதமராக பதவியேற்ற மூன்று நாட்களிலேயே வேலர் பின்டோ என்பவர், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு வேலர் பின்டோ மீது அவரது மனைவியும், மகளும் தங்களை தாக்கியதாக புகார் அளித்திருந்ததை ஊடகம் ஒன்று கடந்த வியாழன்று அம்பலப்படுத்தியது.
இதன் காரணமாக அவரை பதவியிலிருந்து நீக்கக்கோரி கோரிக்கை எழுந்தது. சில அமைச்சரவை உறுப்பினர்களே வேலர் பின்டோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனைத்தொடர்ந்து பதவியேற்ற மூன்றாவது நாளிலேயே வேலர் பின்டோவை பிரதமர் பதவியிலிருந்து பெரு அதிபர் பெட்ரோ காஸ்டிலோ நீக்கியுள்ளார்.
அதேநேரத்தில் வேலர் பின்டோ மனைவியையும், மகளையும் தாக்கியதாக தன்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனவும், நாடாளுமன்றம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றாத வரை பிரதமர் பதவியில் தொடருவேன் என அறிவித்துள்ளார்.