Published on 14/09/2021 | Edited on 14/09/2021

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எவ்வித உயர்வுமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டுவருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 98.96 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ. 93.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களில் சில முறை மட்டுமே விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில நேரங்களில் பெட்ரோல், டீசல் விலை முந்தைய தினங்களைவிட விலை குறைவாக விற்கப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரியை மாநில அரசு குறைத்துள்ளதால், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ. 100க்கும் குறைவாக உள்ளது. மேலும், கடந்த 9 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த விலை மாற்றமுமின்றி அதே விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.