Skip to main content

கலைஞருக்காக பிறந்த நாளை புறக்கணித்த ஐ.பெரியசாமி!

Published on 06/01/2019 | Edited on 06/01/2019
p

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சரான ஐ.பெரியசாமி தனது பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். 


 அதுபோல் மாவட்டத்தில் உள்ள நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை இருக்க கூடிய கட்சி பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை  அங்கங்கே ஐ.பி.யை வாழ்த்தி பிளக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்களையும் அடித்து ஒட்டியதுடன் மட்டுமல்லாமல் ஐ.பெரியசாமியை நேரடியாக வந்து பார்த்து வாழ்த்துக்கள் கூறுவது வழக்கம்.  மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாற்று கட்சியினரும் கூட வந்து ஐ.பிக்கு வாழ்த்து க்கள் கூறுவது வழக்கம்
.


இந்த நிலையில் தான் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தலைவர் கலைஞர் திடீரென உடல்நலம் குறைவால் இறந்தார். இதனால்  ஜனவரி 6 ம்தேதியான இன்று  தனது 67 வயது பிறந்தநாளை கொண்டாட இருந்த ஐ.பி.,  தலைவர் கலைஞர் மறைவையொட்டி தனது பிறந்த நாளை கொண்டாடுவது இல்லை என கூறியுள்ளார். இதனால் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களும் ஐ.பிக்கு வாழ்த்துக்கள் கூற முடியவில்லை.

 

சார்ந்த செய்திகள்