Published on 13/02/2019 | Edited on 13/02/2019

பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு மலர்கள் பூக்கள் வரத்து விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரோடு பூ மார்கெட்டுக்கு பெங்களூரு மற்றும் ஒசூரிலிருந்தும் ரோஜா பூக்கள் ஏராளமாக விற்பனைக்கு வந்தது. அதில் குறிப்பாக ஸ்டெம்ப் ரோஜாதான் காதலர்கள் அதிகம் வாங்கும் ரோஜா என்கிறார்கள் பூ வியாபாரிகள். ஸ்டெம்ப்ரோஜா டன் கணக்கில் விற்பனையாகி வருகிறது. மற்ற நாட்களில் ஒரு ரோஜா பூ பத்து ரூபாய், இப்போது 25 ரூபாய் என விலை கூடியுள்ளது. அந்தளவிற்கு காதலர் தினத்தன்று ரோஜா மற்றும் பூக்களின் விற்பனை நாடு முழுக்க அதிகரித்துள்ளது.