Published on 09/02/2019 | Edited on 09/02/2019

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மனு அளித்துள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க அரசு சாராத மருத்துவர்களை கொண்ட குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கில் தீர்வு காணும் வரை மருத்துவ விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிரான வழக்கு வரும் 11 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது.