தஞ்சையை அடுத்த பாபநாசம் அருகே ஐயம்பேட்டை அடுத்துள்ள சூழப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜா இவர் தன் மனைவி உஷா (30) 5 மாத கர்ப்பிணியுடன் டூவிலரில் ஹெல்மெட் இல்லாமல் பாய்லர் தொழிற்சாலையில் உள்ள கணேஷா வளைவில் சென்றுள்ளார்.
அதேநேரத்தில், அப்பகுதியில் ஆர்.ஐ.காமராஜ் என்பர் ஹெல்மெட் பரிசோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது ஹெல்மெட் இல்லாமல் வந்த தர்மராஜ் போலிசுக்கு பயந்து நிற்காமல் வேகமாக சென்றிருக்கிறார்.
அப்போது போலீஸ் அவரை வழி மறித்து நிற்காமல் அவர் வேகமாக சென்றதால், கோபமாகி தன் டூவிலரை எடுத்துக் கொண்டு ராஜா தம்பதியினரை விரட்டி சென்று தன்னுடைய காலால் அவர்கள் சென்றுகொண்டிருந்த டூவிலரை எட்டி உதைத்திருக்கிறார்.
இதனால் நிலைதடுமாறி ராஜா தம்பதியினர் கீழே விழுந்த போது, எதிரே வந்த வேன் ஏறி ராஜா மனைவி உஷா சம்பவ இடத்திலேயே இறந்து விடுகிறார். ராஜா படுகாயத்தோடு துவாக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, திருச்சி மாவட்டத்தில் ஹெல்மெட் பிரச்சனையில் மிகுந்த கெடுபிடியை ஏற்படுத்தி மிக கடுமையாக நடந்து கொள்ளும் காவல்துறையினர் நடவடிக்கையை கண்டித்து தஞ்சை - திருச்சி மெயின்ரோட்டில் பொதுமக்கள் கடந்த ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களை கலைப்பதற்காக அதிரடி படையினரை களம் இறங்கியிருக்கிறார்கள் காவல்துறையினர். பிரச்சனைக்குரிய ஆர்.ஐ. காமராஜ் உயிருக்கு பயந்து சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.