Published on 07/09/2020 | Edited on 07/09/2020

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்ட் தடுப்பூசி ஆய்வு தமிழகத்தில் இரண்டு இடங்களில் நடத்தப்பட இருக்கின்றது.
கோவிஷீல்ட் தடுப்பூசி சோதனை செய்ய ஐசிஎம்ஆர் சென்னையை தேர்வு செய்துள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, போரூர் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும். சென்னையில் 300 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் தடுப்பூசி சோதனை மேற்கொள்ளப்படும். தேசிய காசநோய் ஆராய்ச்சி கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து பரிசோதனையை மேற்கொள்ளும். இந்நிலையில் முதலில் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கின்ற அந்த நபர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகம் எழுந்துள்ளது.