பெண்ணின் மீது மாவு பாக்கெட்டை தூக்கி எறிந்த எழுத்தாளா் ஜெயமோகன் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி யிடம் புகாா் தெரிவித்தனர்.
நாகா்கோவில் பாா்வதிபுரத்தை சோ்ந்த எழுத்தாளா் ஜெயமோகன் கடந்த 14-ம் தேதி பாா்வதிபுரத்தில் செல்வம் என்பவருடைய பலசரக்கு கடையில் இருந்து வாங்கிய மாவு புளிப்பு எனக்கூறி கடையில் விற்பனை செய்து கொண்டிருந்த செல்வத்தின் மனைவி கீதா மீது மாவு பாக்கெட்டை தூக்கி வீசி கடும் சொற்களால் பேசியிருக்கிறாா். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கீதா அரசு மருத்துவ கல்லூாாி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளாா்.
மேலும் செல்வத்துடன் ஏற்பட்ட கைகலப்பில் செல்வத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், கீதா கொடுத்த புகாாின் மீது போலிசாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
இந்த நிலையில் பெண்ணின் மீது மாவு பாக்கெட்டை தூக்கி வீசியதோடு மோசமான வாா்த்தைகளால் பேசிய எழுத்தாளா் ஜெயமோகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமாி மாவட்ட வணிகா் சங்கங்களின் சாா்பில் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத்திடம் புகாா் கொடுத்தனா்.