தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டதவர்களின் எண்ணிக்கை 5,409 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,547 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 37 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கரோனா பாதிப்பு உள்ளது என்பது தொடர்பான பட்டியலைச் சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னையில் 15 மண்டலங்களில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது என்ற விவரம் பின்வருமாறு,
சென்னையில் அதிகபட்சமாகக் கோடம்பாக்கம் மண்டலத்தில் 461 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ராயபுரம்- 422, திரு.வி.க நகர்- 448, அண்ணாநகர்- 206, தண்டையார்பேட்டை- 184, தேனாம்பேட்டை- 316, வளசரவாக்கம்- 205, திருவொற்றியூர்- 43, மாதவரம்- 33, மணலி- 14, அம்பத்தூர்- 144, ஆலந்தூர்- 16, அடையாறு- 107, பெருங்குடி- 22, சோழிங்கநல்லூர்- 15, மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 8 பேர் என மொத்தம் 2,644 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 2,255 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 23 பேர் உயிரிழந்ததாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.