Skip to main content

ஐகோர்ட் கருத்தை தமிழக அரசு உடனடியாக ஏற்க வேண்டும்: விஜயகாந்த்

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

 

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டாஸ்மாக் கடைகளை கொண்டுவருவதற்கான உயர்நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

Vijayakanth



இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளினால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கபடுவதினால் அரசியல் அமைப்பு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கிராம பஞ்சாயத்து தலைவர் தீர்மானம் நிறைவேற்றியத்தை ஏற்று தமிழக அரசு சட்டம் கொண்டுவர உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளதை தேமுதிக சார்பில் வரவேற்கிறோம்.



தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி உள்ளாட்சி அமைப்புகளில் கீழ் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்தவும், கால நேரத்தை வரையறை செய்யவும் இதுபோன்று சட்டம் கொண்டு வருவதன் மூலம் நமது காலாச்சாரம், இளைஞர்களின் எதிர்காலம், பெண்களின் பாதுகாப்பு போன்றவை பாதுகாக்கப்படும். மேலும் பாலியல் வன்கொடுமை, சாலை விபத்துக்கள் குறைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. எனவே தமிழக அரசு உயர்நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று உடனடியாக செயல்படுத்த வேண்டும்'' என கூறியுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்