Skip to main content

''எப்படி அவ்வாறு பேசலாம்...'' ஆடியோவால் நேருக்குநேர் மோதிக்கொண்ட மாஜிக்கள்?

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

admk

 

அண்மையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் அதிமுக நிர்வாகியும் பேசிக்கொள்வதாக செல்ஃபோன் ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த ஆடியோவில் பேசுவது தான் இல்லை என்று செல்லூர் ராஜு மறுத்திருந்தார்.

 

வெளியான அந்த ஆடியோவில், பேசும் தொண்டர் ''அண்ணே நம்ம கட்சியில் ஜெயலலிதாவிற்கு பிறகு சசிகலா என்றுதானே கொண்டுவந்திருக்கோம். சீனியராக இருக்கும் நீங்கள் எல்லாம் அதனை வழிமொழிய வேண்டும் அண்ணே... உங்களை மாதிரி சீனியர் எல்லாம் விடக்கூடாது அண்ணே'' என பேச, ''அப்படித்தான்யா இருக்கு, அதெல்லாம் விடமாட்டோம். கொஞ்சம் கொஞ்சமா அடிச்சுதான் காலிபண்ணனும்'' என அந்த ஆடியோ நீளுகிறது. அண்மையில் மூத்த அதிமுக நிர்வாகி அன்வர் ராஜா நீக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து உள்கட்சி தேர்தல் என அதிமுக வட்டாரம் பரபரப்பில் சிக்க, தற்பொழுது வெளியாகியுள்ள ஆடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மேலும் இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்த செல்லூர் ராஜு, ''நான் பேசியதாக ஊடங்களில் பரவி கொண்டிருக்கும் செய்தி உண்மை அல்ல. என்னைப்போல யாரோ பேச முயற்சித்துள்ளனர். அப்படி யாரிடமும் பேசவில்லை. அப்படிப் பேச வேண்டும் என்றால் ஊடகத்தின் முன்பே பேசியிருப்பேன். அதிமுக வலுவோடு இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில விஷமிகள் இவ்வாறு செய்துள்ளனர்'' என்று விளக்கமளித்திருந்தார். அதேபோல் அந்த ஆடியோவில் கட்சித் தலைவரை காலணியால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் அப்பா தாக்கியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

How can I talk about my dad .... the magicians who collided head-on with the released audio

 

இந்நிலையில் இன்று அதிமுக அலுவலகத்தில் உட்கட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. அந்த நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதாகவும், அப்பொழுது தன் தந்தை பற்றி எவ்வாறு பேசலாம் என செல்லூர் ராஜுவிடம் ஜெயக்குமார் கேட்டதாகவும் ஒரு தகவல்  வெளியானது.  அங்கு இருந்த மூத்த நிர்வாகிகள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஏற்கனவே அதிமுகவில் சசிகலா தலையீடு, உட்கட்சி தேர்தல், அன்வர் ராஜா நீக்கம் என பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த புது பிரச்சனை அதிமுக வட்டாரத்தில் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்