தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு செப்டம்பர் 1- ஆம் தேதியில் இருந்து பாஜக தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில், எல்.முருகனை நியமித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக பதவி வகித்து வரும் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சுமார் 15 வருடம் வழக்கறிஞர் பணியில் அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த எல்.முருகன், என் மீது நம்பிக்கை வைத்து பதவி தந்துள்ளார்கள்; அதற்கேற்றவாறு செயல்படுவேன் என்றார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழக பா.ஜ.க தலைவராக தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் நியமனம் செய்தது குறித்து நடிகையும், பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மாஸ்டர் ஸ்ட்ரோக் வைத்துள்ளார் என்றும், மக்களின் உணர்வுகளை குறிப்பிட்ட சமூகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் போல தவறாகப் பயன்படுத்தியவர்கள், அவற்றைக் கேடயமாகப் பயன்படுத்தி அவற்றை மாற்றுகிறார்கள். இனி அப்படி விளையாட முடியாது என்றும், தமிழக பாஜகவிற்கு சரியான தலைவர் எங்களிடம் இருக்கிறார். மேலும் பாஜக சாதி, மதம் பார்க்காமல் சமத்துவம் என்பதை நிரூபித்துள்ளது என்று ட்வீட் செய்துள்ளார்.