Skip to main content

“மக்களின் துயரத்திலிருந்து லாபம் சம்பாதிக்க மோடி அரசே துணை போகிறது”- காங்கிரஸ் தலைவர்!!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

 

நாட்டு மக்கள் அனைவருக்கும் தினமும் 1 கோடி தடுப்பூசிகள் வீதம் இலவசமாக போட வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இந்திய குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஒரு டோஸ் விலை மோடி அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.300 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஒரு டோஸ் மோடி அரசுக்கு ரூ150, மாநில அரசுகளுக்கு ரூ.600 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாறுபட்ட விலையை நிர்ணயித்து, மக்களின் துயரத்திலிருந்து லாபம் சம்பாதிக்க மோடி அரசே துணைபோகிறது. மத்திய பாஜக அரசே தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்து அதனை மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் இலவசமாக வழங்கி மக்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்பதே காலத்தின் தேவையாக இருக்கிறது. இதில் குறை ஏற்பட்டால் இந்தியாவுக்கும், அதன் மக்களுக்கும் செய்யும் அவமதிப்பாகக் கருதப்படும்.

 

18 வயதுக்கு மேற்ப்பட்ட இளம் தலைமுறையினருக்கு 2021 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு தடுப்பூசி போட வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளது. நம் மக்களைக் காப்பாற்ற இது ஒன்றே வழி. தற்போது தினமும் 16 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடுவது போல் இல்லாமல், தினமும் குறைந்தது 1 கோடி பேருக்குத் தடுப்பூசி போட்டால் மட்டுமே இதற்கு தீர்வு. எனவே தினமும் 1 கோடி தடுப்பூசியை இலவசமாகப் போட மோடி அரசுக்கு உத்தரவிட உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். கரோனா தொற்றை முறியடிக்க இது ஒன்றே வழி ஒவ்வொரு இந்தியனும் கரோனாவை வென்றெடுக்க இது மட்டுமே தீர்வு” என தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்