Skip to main content

அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மாத்திரை?; மாணவி திடீர் உயிரிழப்பு!

Published on 10/02/2025 | Edited on 10/02/2025
Incident happened to government school student in thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிபாலா என்ற சிறுமி. இவர் பள்ளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், இன்று மதியம் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த கவிபாலாவுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். மேலும், அவருக்கு மூக்கில் ரத்தம் வந்துள்ளது. இதனை பார்த்த மற்ற 2 மாணவிகளும் மயக்கமடைந்துள்ளனர். 

இதனை கண்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவி கவிபாலாவை மீட்டு அருகில் உள்ள அழகியநாயகிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி கவிபாலா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணவியின் உடலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 

இதற்கிடையில், பள்ளியில் மாணவிகளுக்கு குடல்புண் நீக்கம் தொடர்பான மாத்திரை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மயக்கமடைந்த 2 மாணவிகளையும் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்