அடிப்படை உறுப்பினராக இல்லாத போது ஒரு அமைப்புச் செயலாளராக பண்ருட்டியாரை நியமிக்கிறார் என்று சொன்னால் நாடே இல்லாத ராஜாவிற்கு ஒன்பது மந்திரிகளாம் என இந்த பழமொழியைத் தான் சொல்ல முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் 118ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கர் சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சமூக நீதி திராவிட மாடல் எனச் சொல்லும் போது இந்த திமுக அரசு என்ன செய்திருக்க வேண்டும். தலைவர்களின் சிலைக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த திமுக ஆட்சியில் தலைவர்களின் சிலைக்கே பாதுகாப்பு இல்லை.
கிராமத்தில் பழமொழி சொல்லுவார்கள். நாடே இல்லாத ராஜாவிற்கு ஒன்பது மந்திரிகளாம். அதே மாதிரி அவருக்கு கட்சி இல்லை. அவர் அடிப்படை உறுப்பினரே இல்லை. அடிப்படை உறுப்பினராக இல்லாத போது ஒரு அமைப்புச் செயலாளராக பண்ருட்டியாரை நியமிக்கிறார் என்று சொன்னால் இந்த பழமொழியைத் தான் சொல்ல முடியும். இது தான் பொருந்தும்.” எனக் கூறியுள்ளார்.