மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் காணொளி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அனைத்து மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார்.
இதில் கரோனா தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவது, முழு ஊரடங்கு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் கரோனா எப்போது முடியும் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் பழனிசாமி ரொம்ப கவலையாகக் கூறியிருந்தார். இதே முதல்வர் தான், 3 நாளில் கரோனா ஒழிந்து விடும் என்று கூறினார்? “சட்ட மன்றம் நடந்த போதிருந்தே கரோனா பற்றிய விழிப்புணர்வை எதிர்க்கட்சிகள் சொன்னபோது, ஆளுந்தரப்பு அலட்சியப்படுத்தியது. தற்போது நிலைமை படு சீரியஸாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தலைமைச் செயலகத்தில் எந்தெந்தத் தளத்தில் கரோனாத் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது என்று நமது 'நக்கீரன்' தெளிவாகச் சுட்டிக்காட்டிய பிறகும், 60 சதவீத ஊழியர்களைப் பணிக்கு வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது முதல்வர் பழனிசாமி தலைமயிலான அரசு. அதனால் அத்தனை பேரும் அங்கு பதட்டத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர்.