அமமுகவின் தலைமை அலுவலகம், சென்னை அசோக் நகரில் இருக்கும் மாஜி மந்திரி இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமான வாடகைக் கட்டிடத்தில் தான் முன்பு இயங்கியது. அண்மையில் அதிமுகவில் இணைந்த இசக்கி, என் இடத்தைக் காலி செய்யுங்கள் என்று தினகரன் தரப்புக்கு நெருக்கடி கொடுத்ததால் சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகே இருந்த பிரிஸ்ட் பல்கலைக் கழகத்துக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக ஒரு கட்டிடத்தைக் கட்டி அங்கே 12-ந் தேதி ’புது அலுவலகப் புகு விழாவை’ கோலாகலமாக நடத்திவிட்டார் தினகரன். இந்த பிரிஸ்ட் பல்கலைக் கழகத்தின் வேந்தரான முருகேசன்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தினகரனால் தஞ்சையில் நிறுத்தப்பட்டவர்.
![ammk](http://image.nakkheeran.in/cdn/farfuture/gaWLqKPSFYQaDLz5eGJIrYWfLoN5ZvnFWtzrkznakUM/1584361116/sites/default/files/inline-images/291_2.jpg)
அதேபோல் விழாவுக்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகளிடம், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழகம் முழுதும் குறைந்தபட்சம் பூத்துக்கு 50 புதிய உறுப்பினர்களையாவது சேர்க்க வேண்டும். அப்படிப் புதிதாகச் சேரும் உறுப்பினர்களுக்கான கார்டை, விரைவில் ஜெயிலிலிருந்து ரிலீசாக இருக்கும் சசிகலாவே தன் கையால் வழங்க இருக்கிறார் என்று சொல்லித் திகைப் பூட்டியிருக்கிறார் தினகரன். வருகிற தேர்தலை முன்னிட்டு நிர்வாகிகள் மாற்றத்தையும் தினகரன் செய்து வருகிறார் என்று தெரிவிக்கின்றனர்.